தமிழகம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, 2,325 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் திட்டங்களை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தாக்கல் செய்தார். தொழில்வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, துரித மற்றும் பாதுகாப்பான பயணம், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றின் அடித்தளங்களாக விளங்கும் சாலை மற்றும் பாலங்கள் மேம்பாட்டிற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் பட்டியலிட்டார். தமது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்லவும் வழிவகுக்கும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.
THANKS FOR JAYA TV