Wednesday, 3 September 2014

அதிரையில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் (புகைப்படம்) நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிரையில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் (புகைப்படம்) நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.




இந்தப் புகைப்படத்தில் உள்ள மின்கம்பம் 11,000ஆயிரம் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கிக் கொண்டு இருக்கின்றது, இந்த உயர் மின் அழுத்த மின்பாதை அதிரைக்கு நகருக்குள் வருகின்ற மின் பாதைகளில் பிரதான மின் பாதையாகும், ஒரு வேளை இந்த மின் கம்பம் சாய்ந்து போனால், ஒட்டு மொத்த அதிரை நகரும் மின் இணைப்பு இன்றி காணப்படும்மேலும் பொது மக்களும், கால் நடைகளும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்..  

இந்த மின் கம்பம் 1969-1970களில் நிறுவப்பட்டதாகும், கிட்ட தட்ட40ஆண்டுகளை கடந்தது ஆகும், இந்த் மின்கம்பம் இமாம் ஷாஃபி [ரஹ்] மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு எதிரே நீரின்றி, வற்றி, வறண்டு, காய்ந்து, தேய்ந்து, சுருங்கி கிடக்கும் கருசமரி ஏரியில் உள்ளது.

இப்பகுதி 24மணிநேரமும் மக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும், மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், ஒப்பந்தக் காரர்கள் என அனைவரும் இப்பகுதி வழியேதான் அனுதினமும் போய்வருகின்றனர்.

ஆனால் இந்த மின் கம்பம் இதுவரையிலும் யாருடைய கண்களுக்கும்  புலப்படவில்லை.

அது போகட்டும்!
அதிரை மின்சார வாரியம் பழுதான இந்த மின் கம்பத்தை காலக் கிராமத்தில் மாற்றி அமைத்து பொதுமக்களுக்கும், கால் நடைகளுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது,
த/பெ. கோ.மு. முஹம்மது அலியார்.(மர்ஹூம்)
Consumer & Human Rights.
Thanjavur District Organizer, Adirampattinam-614701.
cosumer.and.humanrights614701@gmail.com

No comments:

Post a Comment