தஞ்சையில் பெண்ணை அறைக்குள் பூட்டி 14 பவுன் நகை திருட்டு
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 14, 3:17 PM IST
தஞ்சாவூர், ஆக. 14–
தஞ்சை மாரியம்மன் கோவில் பாக்கியா நகரை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (வயது 53), இவரது கணவர் வேலையின் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டார். இதனால் பாக்கியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டுவேலைகளை முடித்துவிட்டு இரவு நீண்ட நேரம் கழித்து, வீட்டின் முன்புறம் உள்ள அறையில் தூங்கியுள்ளார். நள்ளிரவு கொள்ளையர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 13¾ பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர். முன்னதாக கொள்ளையர்கள் உமாமகேஸ்வரி தூங்கிக்கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் காலை அவர் அறையை திறக்க சென்ற போது அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பூட்டப்பட்டிருந்த அறையைதிறந்தனர். அறையில் இருந்து வெளியே வந்த அவர் பின்பக்கமாக சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சப்–இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
THANKS MALAIMALAR
No comments:
Post a Comment