Tuesday, 5 August 2014

சென்னை மருத்துவமனையில் 1987 முதல் 1143 பேருக்கு இலவச மாற்று சிறுநீரகம்: அதிகாரி தகவல்

சென்னை மருத்துவமனையில் 1987 முதல் 1143 பேருக்கு இலவச மாற்று சிறுநீரகம்: அதிகாரி தகவல்
 
சென்னை மருத்துவமனையில் 1987 முதல் 1143 பேருக்கு இலவச மாற்று சிறுநீரகம்: அதிகாரி தகவல்
சென்னை, ஆக. 5–
சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் விமலா நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1987–ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 1996–ம் ஆண்டு முதல் முறையாக மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடமிருந்து சிறுநீரகம் பெற்று மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மொத்தம் மாற்று சிறுநீரக சிகிச்சை 1143 செய்யப்பட்டுள்ளது. இதில் 1003 உறவினரிடமிருந்து சிறுநீரகம் பெறபட்டது. 140 மூளைச்சாவு நபர்களிடமிருந்து பெறப்பட்டது.
மொத்த சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயனாளிகள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருக்க வேண்டும். இதர மாநிலங்களைச் சேர்ந்த 57 பேர் பயன்பெற்றுள்ளனர். இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 3 நோயாளிகள் சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்று பயனடைந் திருக்கிறார்கள்.
மூளைச்சாவு நபர்களிடமிருந்து பெற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்டவர்களுக்கு அந்த சிறுநீரகம் தக்க முறையில் வேலை செய்வதற்காக மிக விலையுயர்ந்த சில மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம்.
இந்தியாவிலேயே மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை இலவசமாக ஏழை நோயாளிகளுக்கு வழங்கிய முதல் மாநிலம் தமிழகம்தான்.
முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் இணைக்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சை முறைக்கு மேலும் புத்துணர்வு கிடைத்துள்ளது.

THANKS MALAIMALAR.

No comments:

Post a Comment