அதிரை பேருராட்சி
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவிலிருந்து ஈ சி ஆர் சாலை வரை உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அதாவது ஜூன் 20 ஆம் தேதி அன்று வாய்க்கால் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் தட்டுகளை JCB மூலம் அப்புறப்படுத்தி அரைகுறையாக வண்டல் மணல் அள்ளப்படாமல் வியாபாரக் கடைகளுக்கு இடையூறாக அரைகுறையாக வேலை முடியாத பட்சத்திலும் மேலும் ஈ சி ஆர் சாலையில் (சபியா ஸ்டோர்) உள்ள அடைப்பை சரிசெய்யாமல் கழிவு நீர் தேங்கி துர்னாற்றத்தையும் ஏற்படுத்துவதுடன் தொற்றுநோய் பரவும் விதத்தில் சரியாக மூடாமல் போட்டதின் காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விபரம் கேட்டதற்கு அனைத்து வேலைகளையும் முழுமையாக முடித்துள்ளதாக பதிலை அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் அனுப்பிய கடித நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.
தகவல்:ஷஹாபுதீன் முஹம்மது ஹனீபா


No comments:
Post a Comment