Thursday, 14 August 2014

டெல்டா பாசனத்திற்கு கல்லணை திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

டெல்டா பாசனத்திற்கு கல்லணை திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
 
டெல்டா பாசனத்திற்கு கல்லணை திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
பூதலூர், ஆக. 14–
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக வழக்கமாக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12–ந் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை ஜூன் 12–ந் தேதி திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 111 அடியை எட்டியது.
இதனை தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக கடந்த 10–ந் தேதி மேட்டூர் அணை திறக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அணை திறக்கப்பட்டது. முதலில் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முதல் மேலும் 3 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை 1 மணியளவில் கல்லணை வந்தடைந்தது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.
இதனை தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக கல்லணை இன்று மதியம் திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஜெயபால், காமராஜ், பூனாட்சி ஆகியோர் பொத்தானை அழுத்தி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
முதலில் காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அணை திறக்கப்பட்டதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் மற்றும் நெல்மணிகளை தூவினார்கள்.
முன்னதாக அங்குள்ள ஆஞ்சநேயர், விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து கல்லணையில் உள்ள கரிகாலன் சிலை, தமிழ்தாய் சிலை, அகத்தியர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
அணை திறப்பு விழாவில் கலெக்டர்கள் சுப்பையன் (தஞ்சை) மதிவாணன்(திருவாரூர்), முனுசாமி (நாகை) அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக்கண்ணு, சக்தி, பவுன்ராஜ், தஞ்சை மேயர் சாவித்திரி கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், செயலாளர் கு. தங்கமுத்து, தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதா ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு சங்க தலைவர் துரை. திருஞானம், மாவட்ட பால்வளத்தலைவர் காந்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை திருஞானசம்பந்தம், திருவையாறு ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி தமிழரசன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.எம். சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பைந்தமிழ் செல்வன், தலைமை பொறியாளர் சம்பத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கல்லணை இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பயன் பெறுகிறது.
THANKS MALAIMALAR

No comments:

Post a Comment