மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கு தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி, ஆக 8-
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எந்த மொழியில் கேள்விகள் கேட்கப்பட்டாலும், மந்திரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதில் அளிப்பார்கள்.
ஆனால், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது விருதநகர் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் சீன பட்டாசுகள் குறித்து தமிழில் கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த வர்த்தக துறை இணை மந்திரி நிர்மலா சீத்தாராமன், சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தமிழில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜான் ஒப்புதல் அளித்தார். தமிழில் பதில் கூற அனுமதிற்காக சபாநாயகருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
பின்னர் அ.தி.மு.எம்.பி. கேள்விக்கு தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன் 'மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிக்கு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. அக்கடிதத்தின் மீது உரிமையான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
மக்களவையில் தமிழில் கேட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் கிடைத்ததால் அ.தி.மு.க.எம்பிக்கள் மகிச்சிக்குள்ளாயினர். மக்களவையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிர்மலா சீதாராமன் தமிழில் பேசியதை கேட்டு புன் சிரிப்புடன் காணப்பட்டார்.

No comments:
Post a Comment