Tuesday, 5 August 2014

உலகச்செய்திகள்


தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது
 
தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது
ஜோகன்னஸ்பர்க், ஆக. 5-

தென்னாப்பிரிக்காவின் தலைநகரான ஜொகன்னஸ்பர்க்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தனர். இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

ஜோகன்னஸ்பர்கில் இருந்து 180 கி.மீ தொலைவு தெற்கில் உள்ள ஒர்க்னி நகரின் கிழக்குப்பகுதியில் 6 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலுள்ள நாடுகளான போட்ஸ்வானா மற்றம் மொசாம்பிக்கிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

THANKS
MALAI MALAR

No comments:

Post a Comment